இன்று பாகிஸ்தான் பொதுத்தேர்தல் !

Wednesday, July 25th, 2018

இன்று நடைபெறும் பாகிஸ்தானின் பொதுத்தேர்தலில் சுமார் 106 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பி.எம்.எல்.என் கட்சிக்கும் இடையில் கடும் போட்டியாக இந்த தேர்தல் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

272 தேசிய சபை ஆசனங்களுக்கான வாக்குப்பதிவுகள் நேரடியாக இடம்பெறுவதுடன், எஞ்சிய 70 ஆசனங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்காக விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்படும்.

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப்பதிவில் 55 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: