இந்திய – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

Friday, March 3rd, 2023

இருதரப்பு சவால்கள் குறித்து இந்திய மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெற்ற ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திற்கு பக்க அமர்வாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங், ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இருதரப்பு நடப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, எல்லைப் பிராந்தியத்தின் அமைதி தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: