இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்து!
Monday, October 30th, 2023
இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அவசர அமர்வின் போது காஸா பகுதியில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியதால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் நிலைப்பாட்டை இவ்வாறு வலியுறுத்தினார்.
ஹமாஸ் போராளிகளை இலக்காகக் கொண்ட மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களை காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்குமே ஐக்கிய நாடுகள் சபையின் அவசர அமர்வு முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. ஜோர்தான் முன்வைத்த பிரேரணைக்கு வாக்களிப்பதை இந்தியா உட்பட பல நாடுகள் புறக்கணித்த நிலையில் இது தொடர்பாக இந்திய அரசாங்கம் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என இந்திய வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


