உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலான நெருக்கடி – கொரோனா தொடர்பில் எச்சரிக்கும்!

Thursday, April 2nd, 2020

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உலக வல்லரசு நாடான அமெரிக்கா என்பதிலிருந்தே, அந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். வளர்ந்த நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும்  பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தினார்

Related posts: