செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!

Monday, March 19th, 2018

செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக குறைந்த எடைகொண்ட ட்ரோன் விமானத்தினை பரீட்சிக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டில் புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை நாசா செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளது.

இவ் விண்கலத்துடன் இணைத்து குறித்த ட்ரோன் விமானத்தினையும் அனுப்ப முடிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள வளிமண்டல அமுக்கமானது பூமியில் உள்ள அமுக்கத்தின் ஒரு சதவீதமாகவே இருக்கின்றது.

எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் ட்ரோன் விமானத்தினை பறக்க விடுவது சாத்தியமா என்பது தொடர்பிலேயே பரீட்சிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts:

அணுசக்தி உற்பத்திகளை கூட்டாக மேற் கொள்வதற்கு இங்கிலாந்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜப்பான் கைச்சாத்திட்டு...
இமயமலையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! பேராபத்து ஏற்படும் என எச்சரிக்...
மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்டது - மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது - வெள்ளைமாளிகை முன்ன...