அணுசக்தி உற்பத்திகளை கூட்டாக மேற் கொள்வதற்கு இங்கிலாந்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜப்பான் கைச்சாத்திட்டுள்ளது!

Sunday, December 25th, 2016

அணு ஆலைகள் புதிதாக அமைப்பதற்கும் அணுசக்தி உற்பத்திகளை கூட்டாக மேற் கொள்வதற்கு இங்கிலாந்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜப்பான் கைச்சாத்திட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கடந்த 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கம் காரணமாக புகுசிமா பாய்ச்சி அணு ஆலையில் அணுக்கதிர் கசிவை எதிர் கொண்டு மூன்றுபேர் பாதிபுற்றார்களோஇ அதே அணுக்கதிர் நிலையமானது இங்கிலாந்து தொழிநுட்பத்தினுடாக மீள் கட்டமைப்பதற்கான திட்டத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு ஜப்பான் இங்கிலாந்தில் தமது அணு ஆலைகளை நிறுவுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு திட்ட குறிப்புகளை விளங்கப்படுத்தும் கைச்சாத்துகளை ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹிரோசிகி செகோவுடன் இங்கிலாந்தின் வர்த்தக மற்றும் எரிசக்தி துறை செயலாளர் கிரேக் கிளார்க் என்போர்கிடையிலேயே இவ் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளது.

இவ் ஒப்பந்தங்களுடாக ஹிட்டாச்சி மற்றும் டொசிபா அனு ஆலைகளை இங்கிலாந்தில் அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டுள்ளதாக கூறும் கிளார்க். ஜப்பான் குறித்த திட்டத்திற்காக ஒரு ட்ரில்லியன் யென் வரையிலான தொகையை செலவிட உள்ளதாகவும் ஏற்கனவே 18 பில்லியன் பவுன்கள் செலவில் அமைக்கப்பட்ட ஹிங்கிலி அணு ஆலைத்திட்டத்தில் அதிக பங்குதார நிறுவனத்தை கொண்டிருந்த பிரான்சுடன் இணைந்த சீனா பங்கு ஆக்குரமிப்புகளை மேற்கொண்டதால் திட்டம் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஹாரிசன் அணு ஆலை திட்டத்திற்குட்பட்ட கட்டுமானங்களை ஜேர்மனி நிறுவனத்திடமிருந்து ஹிட்டாச்சி வாங்கி கட்டுமானங்களை முன்னெடுத்து வருகின்றது.

வேல்ஸ்லில் அமைக்கப்படும் வைல்பா  (Wylfa) அணு மைய திட்டத்திற்கு பிறகு ஜப்பானால் இன்னும் பல அணு ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. அதே நேரம் கும்ரியா பிராந்தியத்தில் டொசிபா நிறுவனம் நுகேனெரேசன் (Nugeneration) எனும் மேலதிக கட்டுமான செயற்திட்டத்தை தொடங்கியுள்ளது என்பது குறிப்படத்க்க விடயமாகும்.

japan

Related posts: