இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்படப் பல துறைகளில் வாய்ப்பு : அமெரிக்காவில் புதிய வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்க உள்ள பிளிங்கன் கருத்து!

Wednesday, January 20th, 2021

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படப் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளதாக அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள அரசில் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்க உள்ள ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்குப் பல்வேறு துறைகளில் வலுவான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
புதுப்பிக்கத் தக்க எரியாற்றல் துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பை ஆதரிப்பவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் குறிப்பிட்டார். இருநாடுகளிடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க வாய்ப்புள்ளதாகவும் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Related posts: