இந்தியாவில் வெள்ளத்தால் 150க்கும் அதிகாமானோர் பலி!
Thursday, August 25th, 2016
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில் கங்கை நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . ஆனால் தங்களது வீட்டை விட்டு வெளியேற விரும்பாதவர்களை பேரழிவு நிவாரண அதிகாரிகள் படகுகளில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
அக்ஷன் எய்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பேசுகையில், பரந்த அளவில் நெற்கதிர்கள் சேதமாகியுள்ளதால், இந்த நிலை தீவிரமான உணவுப் பிரச்னையை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Related posts:
தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலமானார்!
|
|
|


