இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Friday, May 26th, 2017

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைத்தார். தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா – சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

அசாம் – அருணாச்சல் மாநிலங்களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த பாலத்தை காலை 10.45 மணிக்கு மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து, கார் மூலம் பாலத்தில் பயணித்த மோடி, காரிலிருந்து இறங்கி, பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். இந்த பாலம் திறக்கப்படுவதன் மூலம் அசாம், அருணாச்சல பிரதேசம் இடையேயான பயணம் நேரம் 4 மணிநேரம் வரை குறையும்.

Related posts: