பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Monday, December 5th, 2016

பொருளாதார வளர்ச்சியில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது பிரித்தானியா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 பில்லியன் பவுண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பிரித்தானியாவில் 3.9 மில்லியன் சிறுவர்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் ஏழ்மையை அடியோடு ஒழிக்கும் வகையில் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் யுனிவர்சல் அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரபல அறிஞர் அலெக்ஸ் வில்லியம்ஸ் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பிரித்தானியர்களும் மணிக்கு 8.45 பவுண்டும், நாள் ஒன்றுக்கு சுமார் 70 பவுண்டும் ஊதியமாக பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்திற்கும் மேலதிகமாக வருவாய் ஈட்டும் குடிமக்களிடம் இருந்து வரி ஈடாக்க வேண்டும் எனவும் அலெக்ஸ் வில்லியம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த திட்டமானது நடைமுறை சாத்தியமாவது என்பது பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக உலக பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சரிவை சந்தித்து வருவதால் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதன் தேவை அதிகரித்துள்ளதாக அலெக்ஸ் வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.

எனினும், குறித்த யோசனை திட்டமானது பொருத்தமற்ற ஒன்று என ஒரு தரப்பினர் கருத்துகளை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பிரித்தானிய மக்களுக்கும் இன்றி அங்கு வாழும் தமிழர்களுக்கு பெரும் அதிஷ்டமாக அமையும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

எவ்வாறாயினும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவுள்ள நிலையில், தனது நாட்டு பிரஜைகளுக்கு மேலதிக உதவிகளை செய்ய அரசும் திட்டம் தீட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: