இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

இத்தாலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் ஆடம்பரக் ஹொட்டலொன்றிலிருந்த சுமார் 100 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
ஒஸ்ரிய எல்லையிலுள்ள வடமேற்கு இத்தாலியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் 4 ஹெலிகொப்டர்களின் உதவியுடன் ஹொட்டலில் சிக்கியிருந்த சுற்றுலாப்பயணிகள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்தாலியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவுடன் கடும் குளிரான காலநிலையும் நீடித்திருந்தது. இதனால் குறித்த பகுதியில் மீண்டும் பனிச்சரிவுஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
Related posts:
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்!
கொரோனா ஆராய்ச்சியிலிருந்த அமெரிக்க பேராசிரியர் சுட்டுக்கொலை!
|
|