கொரோனா ஆராய்ச்சியிலிருந்த அமெரிக்க பேராசிரியர் சுட்டுக்கொலை!

Thursday, May 7th, 2020

கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரை கொலை செய்த நபரும் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் பிங் லியூ(37), பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர்.

பிங் லியு, சனிக்கிழமை பிற்பகல் எல்ம் கோர்ட்டில் உள்ள ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொலை நடந்தது. அவரது மனைவி வெளியில் சென்றிருந்தார். அவர்களிற்கு குழந்தைகள் இல்லை.

46 வயதான ஹாவோ கு என அடையாளம் காணப்பட்ட மனிதரே கொலையை புரிந்துள்ளார்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

லியு தலை, கழுத்து மற்றும் உடற்பகுதியில் தோட்டாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

படுகொலை நடந்த இடத்திற்கு அண்மையாக நிறுத்தப்பட்டிருந்த தனது காரிற்கு திரும்பி வந்த கொலையாளி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்தில் வைத்தியர் பிங் லியூ இருந்துள்ளார்.

சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கணினி அறிவியலில் பி.எச்.டி பெற்றார், பின்னர் பிட்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார்.

உயிரிழந்த வைத்தியரினதும், மனைவியினதும் பெற்றோர் தற்போதும் சீனாவில் வாழ்கிறார்கள்.

Related posts: