நீரிலும், வானிலும் செல்லும் மிகப் பெரிய விமானம்!

Friday, February 17th, 2017

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது.

53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.

நடுக்கடலில் ஏதேனும் கப்பல் விபத்து ஏற்படும் சமயத்தில் விரைந்து சென்று மீட்கும் வகையிலும், நிலப் பரப்பில் காட்டுத் தீ பற்றி எரிந்தால் உடனே சென்று அணைக்கும் வகையிலும் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சீன ராணுவப் பொறியாளர்கள் கூறியுள்ளனர். இந்த அதிநவீன விமானம் இந்த ஆண்டில் சோதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

201702152153197382_china-introduced-world-largest-amphibious-aircraft_SECVPF

Related posts: