கொரோனா தொற்று : பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு!
Monday, August 10th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது.
இந்நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. ரியோ டி ஜெனீரோவிலுள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின் சார்பில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிற பலூன்கள் மணலில் நடப்பட்டிருந்த சிலுவையில் கட்டப்பட்டிருந்தன.
அதன்பின்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரம் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதேவேளை பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 29 இலட்சத்து 62ஆயிரத்து 442பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது - அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர...
பருத்தித்துறையில் NPP ஆதரவாளர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு - இருவர் படுகாயம்!
|
|
|
4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு...
கற்றல் கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க முடியா...
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக...


