பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது – அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, December 11th, 2024

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக்(Cake) விலையை குறைக்க முடியாது என அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.

கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நல்லெண்ணெய், கோதுமை மா, முட்டை உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரிய போதிலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான கேக்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ தரமான கேக்குகள் 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும்  ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts:

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்- பிரதமரைச் சந்தித்துப் பேச்சு: போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுக்கள் ஜனவரி 18 இல் பரிசீலனைக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க ...