சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு ஈ.பி.டி.பி யிடம் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 5th, 2020

சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் தாம் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் எமது பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காமையினால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள மட்டக்களப்பு கல்லடி, திருச்செந்தூர், டச்பார், நாவலடி ஆகிய பிரதேசங்களின் கடற்றொழிலாளர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதிகளின் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தினருடன் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கல்லடி கடற்கரைப்பகுதியில் சந்திப்பொன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் – கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்துக்கு குறித்த விடயத்தை கொண்டுசென்று  தீர்வை விரைவாக பெற்றுத்தருவதாக தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: