இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு அனுமதி மறுத்துள்ள சீனா!

Monday, April 30th, 2018

மியான்மர் கச்சின் பகுதி தனி இனமக்கள் மீது, அந்த நாட்டு இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த மக்கள் எல்லை வழியாக சீனாவுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலையில் அவர்களுக்கான அனுமதியை சீனா மறுத்துள்ளது.

கச்சின் எனும் பகுதியில் வாழ்ந்து வரும் குறித்த மக்கள், கச்சின் என்ற தனி இன மக்களாக கருதப்படுகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை ஒடுக்கும் வகையில், இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அவர்கள் எல்லை வழியாக சீனாவை நோக்கி இடம்பெயந்து வந்தமையை அடுத்து சீனா அவர்களுக்கான அனுமதியை மறுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதற்கு அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

Related posts: