ஆளுமையை அதிகரிக்க சீனா முயற்சி!

Tuesday, May 31st, 2016

ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 தொன் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது சீனாவின் நோக்கம்.

பசுஃபிக் பகுதியிலுள்ள உலகின் மிகவும் ஆழமான இடம் என அறியப்படும் மரியானா அகழிக்கு மனிதர்களை கொண்டு செல்வது இதன் நோக்கம்.

ரெயின்போ ஃபிஷ் எனும் தனியார் சீன நிறுவனம், 11,000 மீட்டர் ஆழம் செல்லக்கூடிய புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை உருவாக்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த அகழிக்கு இருமுறை மட்டுமே ஆட்களுடனான ஆய்வுக்கலன் சென்றுள்ளது.

அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலின் அழுத்தங்களை தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்குமென வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டுவாக்கில், அங்கு இறங்க முடியும் எனவும் அவர்கள் எண்ணுகிறார்கள்.

சீனா ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் கடலை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணுகிறது என சிலர் அஞ்சுகின்றனர்.

ஆனால் ரெயின்போ ஃபிஷ் குழுவோ இது அரசியலற்ற முழுமையான வர்த்தகத் திட்டம் எனக் கூறுகிறது.

ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் தேசமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Untitled-3 copy Untitled-2 copy

Related posts: