யேமனில் இராணுவ – கிளர்ச்சிப் படையினர் மோதலில் 70 பேர் பலி!

Tuesday, January 24th, 2017

யேமனில் இராணுவத்தினருக்கும், கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இருதரப்பிலும் 70 பேர் பலியாயினர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

யேமனில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவாளர்கள் உள்நாட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக சில இனக்குழுக்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு எதிராக  இராணுவமும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள துபாப் மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவமும், தற்போதைய ஜனாதிபதி அபேத்ரபோவின் ஆதரவுப் படையும் முயன்று வருகின்றன.

இதையொட்டி, இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சனிக்கிழமை முதல் கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதிகள் மீது விமானங்கள் மூலம்  இராணுவம் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்த மோதலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி 70 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் இராணுவத்தினர் 14 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாப் மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்காக அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

16728483982

Related posts: