ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் – ரஷ்யா அழைப்பு!

Wednesday, April 18th, 2018

சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படும் பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதிகளுக்கு இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பின் உண்மையை கண்டறியும் பணியாளர்கள் விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் சர்வதேச இரசாயன ஆயுத ஆய்வாளர்கள் குழு சிரியாவில் தங்கியுள்ள நிலையில் அவர்கள் இரசாயன தாக்குதல் இடம்பெற்ற டவுமா பகுதிக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது குறித்த குழுவினரை இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாக்குதல் இடம்பெற்ற டவுமா பகுதிக்கு ரஷ்யா சென்றுள்ள நிலையில் விசாரணைகளை தாமதப்படுத்தும் வகையில் ஆதாரங்களை ரஷ்யா அழித்திருக்கலாம் என இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பின் அமெரிக்க தூதுவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இருப்பினும் டவுமாவில் ஆதாரங்களை அழிக்கும் வகையில் எந்த விதமான நடவடிக்கையையும் தாம் முன்னெடுக்கவில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.

Related posts: