அமெரிக்காவின் அதிரடி அறிக்கை

Friday, April 28th, 2017

வட கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இராணுவ செயல்பாடுகளால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் கணித்து கூறியுள்ள நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக வட கொரியாவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.

வட கொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனையை நிறுத்துவதே எங்கள் நோக்கம் என்றும் உலகப்போருக்கு நாங்கள் வழிவகுக்கவில்லை என்று அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், வடகொரியா நாடு யாருடைய பேச்சுக்கும் அடிபணியாமல், அணு ஆயுத சோதனையை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

ஜப்பானின் ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வட கொரியாவின் அடுத்த குறி அமெரிக்க ராணுவ தளங்கள் ஆகும்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன், பாதுகாப்புச் செயலர் ஜிம் மாட்டிஸ் மற்றும் தேசிய உளவு நிறுவன இயக்குநர் டான் கோட்ஸ் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், நிலைத்ததன்மையையுமே அமெரிக்கா விரும்புகிறது.அதனால், பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என்றும், எங்களையும், கூட்டாளிகளையும் பாதுகாக்கத் தயாராகவே இருக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: