ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்!
Thursday, November 9th, 2017
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள தனியார் டி.வி நிலையத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பர்ஷோத் மொழி டி.வி நிலையத்தில் நேற்று(07) ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் காவலர் ஒருவரும், அலுவலக ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக டி.வி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
Related posts:
ஊழல் தண்டனையை குறைக்கும் ஆணை ரூமேனியாவில் இரத்து!
படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !
|
|
|


