ஆட்சியமைக்கிறார் பழனிசாமி: 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு!
Thursday, February 16th, 2017
தமிழகத்தில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, கூவத்தூர் விடுதியில் உள்ள சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக தனி அணி அமைத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த தகவலை அடுத்து சசிகலா தரப்பு அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts:
காணாமல் போன மலேசிய படகு: 25 சீன குடிமக்கள் உயிருடன் மீட்பு!
புகையிரதம் தடம்புரண்டு 5 பேர் உயிரிழப்பு!
அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!
|
|
|


