அயர்லாந்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Wednesday, October 18th, 2017
ஒஃபெலியா என பெயரிடப்பட்ட அசாதாரணமான சூறாவளி அயர்லாந்தை தாக்கியுள்ளது.
இந்நிலையில் அங்கு சகல பாடசாலைகள் கல்லூரிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் மேற்கு கரையோர பகுதியை சூறாவளி சென்றடையும் போது அதன் தாக்கம் குறைவடைய கூடும் என காலநிலை அவதான அமைப்பு தெரிவித்துள்ள போதிலும் பாதிப்பின் தன்மை குறைவடையவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியை அடுத்து பாரிய மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் அட்லான்டிக் சமுத்திர பிராந்தியத்தில் இப்படியான பாரிய சூறாவளி ஏற்பட்டதில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு உயிராபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


