அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த கொலம்பிய மக்கள்!

Monday, October 3rd, 2016

கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் இயக்கத்திற்கும் இடையே எட்டப்பட்டுள்ள அடையாள முக்கியத்துவம் வாய்ந்த அமைதி உடன்படிக்கையை மிகவும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் கொலம்பிய மக்கள் நிராகரித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 13 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களித்தனர். ஆனால், 60 ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், ஒப்பந்தத்தை நிராகரிக்கும் தரப்பு வென்றது.

கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் ஃபார்க் தலைவரோடு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ், தான் பதவி விலக போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

ஐந்து தசாப்தகால வன்முறையை போர்நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்த பதவியில் இருக்கும் கடைசி நாள் வரை அமைதிக்காக உழைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவில் வருத்தம் அடைவதாக தெரிவித்திருக்கும் டிமோசென்கோ என்றியப்படும் ஃபார்க் குழுவின் தலைவர், தானும் அமைதியை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 40 சதவீதத்திற்கும் குறைவானோரே வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

_91495838_d78fb67f-53ce-4399-ba87-f3d71932cf15

Related posts: