குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் – வெளிநாட்டவர்களை தொட வேண்டாம் என சீனாவில் அறிவுறுத்து!

Monday, September 19th, 2022

சீனாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் பதிவானதை தொடர்ந்து சீனாவின் சுகாதாரத்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டவர்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு சீனாவின் சுகாதாரத்துறை பிரதானி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைமை தொற்றுநோயியல் நிபுணரான வூ ஸுன்யோ (Wu Zunyou), சனிக்கிழமையன்று Weibo சமூக ஊடக தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் கொவிட் -19 கட்டுப்பாடுகள் இதுவரை குரங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுத்துள்ளது.

அண்மையில், சோங்கிங்கின் தென்மேற்கு பகுதியில் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டார்.

மேலும் அந்த நபர் வெளிநாட்டவரா அல்லது சீன நாட்டவரா என்பது தெரிவிக்கப்படவில்லை. காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் குரங்கு காய்ச்சல் தொற்றுநோய், மே மாதத்தில் உலகம் முழுவதும் வெளிவரத் தொடங்கியது.

இந்த ஆண்டு இதுவரை 23,500 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: