கிறிஸ்துமஸ் காலத்தில் பயங்கரவாத தாக்குதல் – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Saturday, November 18th, 2017

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சுற்றுலா தலங்களை குறிவைத்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.குறித்த எச்சரிக்கையானது லண்டன், மான்செஸ்டர் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கடந்த ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலையும் அமெரிக்க வெளிவிவகாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது மத அடிப்படைவாதிகள் இந்த தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும்.

இதனால் வணிக வளாகங்கள், ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் மற்றும் விமான நிலையங்கள் என எதிர்வரும் வாரங்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெரிலின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்னர் இதேபோன்ற ஒரு எச்சரிக்கை அறிக்கையை அமெரிக்க வெளிவிவகாரத்துறை வெளியிட்டுருந்தது.தற்போது வெளியிட்டுள்ள எச்சரிக்கையானது எதிர்வரும் ஜனவரி 31-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts: