அழித்து விடுவோம் – தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!

Wednesday, April 6th, 2016

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனை தட்டிக்கேட்கும் நாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த வட கொரியா தற்போது தென் கொரியாவுக்கு எதிரான எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் அரசாங்கத்துக்கு ஆதரவான DPRK ஊடகத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் வடகொரிய வீரர்கள் தென் கொரியாவின் முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் தென் கொரிய ஜனாதிபதியின் அலுவலகமான புளூ ஹவுஸ் வெடித்து சிதறுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. தென் கொரியாவை அழித்து அனைத்தையும் சாம்பலாக்கி விடுவோம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து எச்சரிக்கை வீடியோ வெளியிட்டு வரும் வடகொரியா சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் போருக்கு வட கொரியா தயாராகி வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

Related posts: