அமைதி உடன்படிக்கை நிராகரிப்பு: புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகளோடு ஆய்வு!

Tuesday, October 4th, 2016

நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற அமைதி ஒப்பந்தத்தை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் நிராகரித்து விட்ட நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அமைதி முன்னெடுப்புக்கு ஒரு வழி காணும் முயற்சியாக கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்திருக்கிறார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னதாக ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய ஃபார்க் கிளர்ச்சிக்குழுவோடு செய்து கொண்ட அடையாள முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தை திருத்தி அமைப்பதற்கான வழிகளை கலந்தாய்வு செய்வதற்கு மூத்த அரச அதிகாரிகளை அவர் நியமித்திருக்கிறார்.

இந்த அமைதி உடன்பாட்டிற்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அதிபர் அல்வாரோ யுரிபே இதில் கலந்து கொள்ளாமல், அவருடைய தனிப்பட்ட அணி ஒன்றை இதற்காக நியமித்திருக்கிறார்.

மிக கடுமையான குற்றங்கள் புரிந்த கிளர்ச்சியாளர்கள் சிறை தண்டனை பெற வேண்டும் என்றும், சில ஃபார்க் தலைவர்கள் அரசியலில் இருந்து தடை செய்யப்படவும் வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

கொலம்பிய அரசோடு செய்தகொண்ட இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைபிடிக்கப் போவதாக டிமோசென்கோ என்றியப்படும் ஃபார்க் குழுவின் தலைவர் கூறியிருக்கிறார்.

_91509726_02b4c048-bfec-4aca-b9ee-9c2a5a0c6c24

Related posts: