அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை!
Sunday, June 30th, 2019
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஜப்பானில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுஹாவே தொழில்நுட்ப நிறுவன உற்பத்திகளை, அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதியளிப்பதாக, டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேநேரம், 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் இறக்குமதிக்கு அமெரிக்கா வரிகளை அறவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
பங்களாதேஷை உலுக்கும் மோரா சூறாவளி!
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை - டிரம்ப் அதிரடி!
மற்றொரு ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா!
|
|
|


