அமெரிக்காவில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Monday, June 26th, 2017

அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக அமெரிக்க உட்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்தும் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு சென்றார்.. வாஷிங்டன் விமான நிலையத்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேச உள்ளார் மோடி இந்த சந்திப்பின்போது ராணுவ கூட்டுறவு, சர்வதேச அளவிலான உறவு, வர்த்தகம், எரிசக்தி துறை தொடர்பான விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: