அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
Thursday, October 26th, 2023
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று இரவு உணவகம், விளையாட்டுப் பாதை உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
முன்னதாக தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 60 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதோடு துப்பாக்கிதாரியின் புகைப்படங்களையும் அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ராபர்ட் கார்ட் என்ற சந்தேக நபர், இராணுவத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லூயிஸ்டன் பொலிஸார் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
|
|
|


