அமெரிக்காவில் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி!
Thursday, April 1st, 2021
அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள விடுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேரும், மற்றுமொரு அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!
மருத்துவ உலகை அச்சுறுத்தும் கொரோனா: இருவரை அமெரிக்காவில் 80 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்!
|
|
|


