மருத்துவ உலகை அச்சுறுத்தும் கொரோனா: இருவரை அமெரிக்காவில் 80 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்!

Tuesday, May 12th, 2020

கொரோனா தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 656 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமைமுதல் ரஷ்யா கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை தளர்த்தத் தொடங்கும் என்று பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் குறைந்தது 221,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், COVID-19 இனால் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதித்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொண்டிருக்கின்றன.

இதுநேரம் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளார சரிவை சரி செய்ய மிகச் சடுதியான நடவடிக்கைகளில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. பொருட்களிற்கு 3 மடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் உதவித் தொகைகளையும் நிறுத்தியுள்ளது.

உலகளவில், கொரோனா வைரஸினால் 42 இலட்சத்து 53 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,5 இலட்சத்து 27 ஆயிரலத்த இரண்டு பேர் குணமடைந்தனர்.

இதனடிப்பரையில் நேற்று அமெரிக்காவில் 1,008 பேர் உயிரிழந்தனர். இதுவரை 81,795 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 18,196 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகைக்குள் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் தமது மேசைகளில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லொக் டவுன் கட்டுப்பாடுகளிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வந்தாலும், பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த போராட்டங்களை ஆதரிக்கவில்லையென்பது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்தது.

அத்துடன் நேற்று பிரேஸிலில் 502 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 11,625 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 6,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 169,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் சலூன், ஜிம்களை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். லொக் டவுன் நீடித்தாலும் அவை திறக்கலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லொக் டவுனை உள்ளூராட்சி நிர்வாகங்கள் அமுல்ப்படுத்தியிருந்தாலும், பிரேஸிலின் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அதை எதிர்த்து வருகிறார்.

பிரான்சில் நேற்று 263 பேர் உயிரிழந்தனர். இதுவரை 26,643 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 177,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நேற்று 210 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 32,065 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,877 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 223,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 123 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 26,744 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,480 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 268,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நேற்று 179 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 30,739 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 744 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 219,814 பேர் பாதிக்கப்பட்டனர்.

ரஷ்யாவில் நேற்று 94 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,009 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 11,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 221,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: