அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் – கனடா அரசாங்கம் அறிவிப்பு!
Wednesday, September 20th, 2023
அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு – கஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கனடா அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா – கனடா இடையிலான உறவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனடா அரசாங்கம் தனது மக்களுக்கான பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது.
கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


