விமானங்களில் ‘செல்பி’ எடுக்க வருகின்றது  தடை?

Saturday, August 27th, 2016

விமான சேவை சட்டம் 1937–இன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’ உள்ளிட்ட பல்வேறு வகையிலான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

இதில் பயணிகள் மட்டுமின்றி, விமானி உள்ளிட்ட ஊழியர்களும் ஈடுபடுவது விமான போக்குவரத்து துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கூட இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் 6 விமானிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, விமானத்தின் விமானிகள் அறையில் வைத்து ‘செல்பி’ புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கடுமையான தடை விதிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சட்டதிட்டங்களுடன், புதிய கட்டுப்பாடுகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று விரைவில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: