அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக பிரித்தானிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

உலகளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்க சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் குடிவரவாளர்கள் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பான விடயங்களிலும் கொரோனா தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.
அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்கான உதவிகள் (NASS Support) இலகுவாக மீளப்பெறவதற்கும் மற்றும் அகதி உதவியின் அடிப்படையில் வீடுகளில் இருப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்திப்பதையும் எதிர்வரும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|