அகதிகளைக் கடலில் தூக்கி வீசிய கொடூரம்!

Saturday, August 12th, 2017

எத்தியோப்பியாவிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற 160 அகதிகள் போதைப் பொருள் கடத்தல்காரர்களால் கடலில் தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடுமையான பஞ்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகக் குடியேறிவருகின்றனர்.

அவர்கள் படகுகள் மூலம் பாதுகாப்பில்லாத ஆபத்தான பயண முறையில்தான் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர்.கடந்த புதன்கிழமை, எத்தியோப்பியாவிலிருந்து 160 அகதிகள் படகுகள் மூலம் ஏமன் சென்றுள்ளனர்.அவர்களைப் படகில் கூட்டிச் சென்ற போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கரை வருவதற்கு முன்னரே அவர்கள் அனைவரையும் வலுக்கட்டயாகக் கடலில் தூக்கி வீசியுள்ளனர்.

கடற்படை படகு வருவதை அறிந்து போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடலில் தூக்கி வீசியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது என்று ஐ.நாவின் புலம்பெயர்பவர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts: