அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு அரசு உதவி -மனிட்டோபா முதல்வர் அறிவிப்பு!

Thursday, February 16th, 2017

 

அகதிகளுக்கு உதவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிச்சயமாக உதவிகள் வழங்கப்படுமென கனடாவின் மனிட்டோபா மாகாண முதல்வர் Brian Pallister தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு உதவிகள் வழங்குவது மட்டுமன்றி, எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் கனேடியர்களது பயங்களையும் சந்தேகங்களையும் போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனிட்டோபா மாகாணத்தில் அகதிளுக்கு தற்காலிக வதிவிட வசதிகள் வழங்கும் ‘Welcome Place’ என அழைக்கப்படும் புதியகுடிவரவாளர்களை வரவேற்கும் நிலையத்தில், புதிதாக வரக்கூடியவர்களிற்கான இடவசதிகள் இனி இல்லை எனவும், அகதிகள் தொடர்ந்தும் அமெரிக்காவில் இருந்து எல்லை கடந்து கனடாவினுள் வரும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

sal

Related posts: