MCC தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு!
Saturday, May 7th, 2016
கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து,தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார்.
எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழகம் சார்பாகப் பதவியேற்கும் இளைய தலைவராகத் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி !
ஓரங்கட்டப்பட்டார் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க!
யாழ் மாவட்ட ஏ அணி அசத்தல் வெற்றி!
|
|
|


