இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி !

Tuesday, June 6th, 2017

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான ஷாகித் அப்ரிடி ஐசிசி இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்

மறக்க முடியாத போட்டியை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது, ஒரு ஆதரவாளராக இதனை பார்க்க வேதனையாக உள்ளது.இந்தியா வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா அதே தன்மையுடன் கடைசி வரை விளையாடியது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது பந்துவீச்சை தெரிவு செய்தார்.ஆனால் மோசமான திட்டமிடலும், அணுகுமுறையும் சொதப்பிவிட்டன.இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்றுவிட்டனர், தொடர்ந்து கோஹ்லி, யுவராஜ் சிங்கும் அதிரடி காட்டினர்.பாகிஸ்தான் பீல்டிங்கும் சாதாரணமாகவே இருந்தது, கேட்சுகளை தவறவிட்டனர். இந்தியா 319 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 164 ஓட்டங்களில் சுருண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Related posts: