யாழ் மாவட்ட ஏ அணி அசத்தல் வெற்றி!

Wednesday, July 25th, 2018

வடமாகாண துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 23 வயதுக்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாண மாவட்ட அணி 149 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மாவட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக நிசான் 58 ஓட்டங்களையும் அலன்ராஜ் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரதுசன் 4 இலக்குகளையும் அஞ்சேயன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர். 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு மாவட்ட அணி 21.1 பந்துப் பரிமாற்றங்களில் 89 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. கயன் ஆட்டமிழக்காமல் பெற்ற 30 ஓட்டங்களே அதிகபட்சம்.

Related posts: