ICC யின் நடவடிக்கைகள் குறித்து தென் ஆபிரிக்கா வீரர் அதிருப்தி!

Monday, March 13th, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின்  நடவடிக்கைகள் குறித்து தென் ஆபிரிக்க நட்சத்திர வீரர் பாப் டு பெலிஸ்சிஸ் ( Faf du Plessis) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பெங்களுரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது விராட் கொஹ்லி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவை எவ்வித தண்டனையும் வழங்காமை அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பந்தை சைன் செய்த குற்றச்சாட்டுக்காக தமக்கு தண்டனை விதித்த சர்வதேச கிரிக்கட் பேரவை, அதனை விடவும் பாரிய தவறுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கட் பேரவையின் இரட்டை நிலைப்பாடு வெளியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: