ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!

Wednesday, August 9th, 2017

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மூவர், ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

அதற்கமைய, குசால் மென்டீஸ், 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.குறித்த தரவரிசையில் அவர் 19ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.திமுத் கருணாரத்ன 13 இடங்கள் முன்னேறியுள்ளதுடன் அவர் தற்போது டெஸ்ட் தரவரிசையில் 24ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.நிரோஷன் திக்வெல்ல 21 இடங்களை கடந்து 68ஆவது இடத்தில் உள்ளார்.இதுதவிர, இந்தியாவுடனான முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாரிய தோல்வியை சந்தித்த இலங்கை அணியின் மனோநிலையை திடப்படுத்தும் மூலோபாய அமர்வு கொழும்பில் இடம்பெற்றதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.பல்லேகல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இலங்கையை முன்னேற்றுவதற்காக இடம்பெற்ற இந்த அமர்வில், இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப மற்றும் உளவியல் உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.அத்துடன், அரவிந்த டி. சில்வா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல சாதனையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை, முன்னாள் வேகபந்து வீச்சாளர் ருமேஷ் ரத்னாயக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேக பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: