அந்த தருணத்தில் உருக்கமாக பேசிய ரொனால்டோ!

Saturday, November 19th, 2016

யூரோ கிண்ணத் தொடரில் போர்த்துக்கல் சாம்பியன் ஆனதும் கிறிஸ்டியானோ ரொனால்டோ டிரஸ்ஸிங் ரூம்பில் உருக்கமாக பேசிய வீடியோவை போர்த்துக்கல் கால்பந்து சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

பாரிஸில் நடந்த 2016 யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்த்துக்கல்.

போட்டி தொடங்கிய 15வது நிமிடத்திலே ரொனால்டோ காயம் காரணமாக கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.அதேசமயம் ரொனால்டோ களத்துக்கு வெளியே பயிற்சியாளர் அவதாரம் எடுத்ததையும் யாரும் எளிதில் மறக்க முடியாது. வெற்றிக்கான கோலை எடெர் அடிக்க, போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனதை கொண்டாடி தீர்த்தார் ரொனால்டோ.

இதைத் தொடர்ந்து அவர் டிரஸ்ஸிங் ரூம்பிற்கு சென்று வெற்றி குறித்து உருக்கமாக பேசினார். தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

டிரஸ்ஸிங் ரூம்பில் ரொனால்டோ பேசியதாவது, முதலில் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸூக்கு நன்றி. அவர் இல்லாமல் இது சாத்தியமில்லை.மேலும், இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் அனைவருக்கும் நன்றி. போர்த்துக்கல் கிண்ணம் வெல்லும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் நாம் தற்போது சாதித்து உள்ளோம்.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. நான் தனிப்பட்ட முறையில் வாங்கிய கிண்ணங்களை விட இந்த வெற்றி மகத்துவமானது.இதற்காக நான் ஏற்கனவே நான்கு முறை அழுதுவிட்டேன். இந்த கிண்ணம் தான் கை நழுவிக் கொண்டே இருந்தது. இப்போது அதுவும் கிடைத்து விட்டது.

மீண்டும் ஒரு முறை பயிற்சியாளருக்கு நன்றி. நீங்கள் அணியின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: