33 ஆண்டுகளுக்கு பின்  இங்கிலாந்து வீராங்கனை!

Tuesday, July 11th, 2017

33 வருடத்திற்குப் பிறகு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை கோன்டா பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நேற்றையதினம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா, பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(3) என கோன்டா முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் கார்சியா 6-4 என கார்சியா வெற்றி பெற்றார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கோன்டா சிறப்பாக விளையாடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 1984-ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 33 வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார்.

Related posts: