தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்!

Monday, June 26th, 2017

அவுஸ்திரேலிய ஒபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சிட்னி நகரில் அவுஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சீனாவின் சென் லாங் பலப்பரீட்சை நடத்தினர்.சென் லாங்கிடம் ஏற்கனவே 5 முறை ஸ்ரீகாந்த் தோற்றுள்ளதால், இந்த ஆட்டத்தில் அவர் தகுந்த பதிலடி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

முதல் செட்டில் இருவருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 22-20 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றினார்.இரண்டாவது செட் ஆட்டத்தில் சென் லாங் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியான ஷாட்களை அடித்து ஸ்ரீகாந்த் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 முறை தோல்விக்கு தகுந்த பதிலடியை ஸ்ரீகாந்த கொடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரிலும் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: