இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது ஐ.சி.சி.!

Thursday, September 8th, 2016

இரண்டு விதமாக வரிசைப்படுத்தி டெஸ்ட் போட்டிகளை நடத்த கொண்டுவந்த புதிய பரிந்துரையை இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாக  திரும்ப பெற்றுக்கொள்வதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் கடுமையான போட்டி, சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், அணிகளை இரண்டு விதமாக வரிசைப்படுத்தி டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிந்துரை செய்தது. அதாவது தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள முன்னணி அணிகள் ஒரு பட்டியலில் இடம் பெற்று டெஸ்டில் மோத வேண்டும். இதே போல் தரவரிசையில் கடைசி 5 இடங்களில் உள்ள அணிகள் இன்னொரு பகுதியாக தங்களுக்குள் டெஸ்ட் விளையாட வேண்டும். பின்தங்கிய அணிகளில் உறுப்பு நாடுகள் அயர்லாந்து, ஆப்கானிஸ்தானும் சேர்க்கப்படும். பிறகு அணிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு சில அணிகளை முதல் தரத்துக்கு கொண்டு செல்வதா? அல்லது தரம் இறக்குவதா? என்பது முடிவு செய்யப்படும்.

ஐ.சி.சி.யின் இந்த புதிய திட்டத்துக்கு இந்தியா பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இந்த நிலையில் துபாயில் நடந்த இரண்டு நாள் ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

download-46

Related posts: