அஸ்வினை திட்டித் தீர்க்கும் கவாஸ்கர்!

Saturday, April 2nd, 2016

சுழற்பந்து வீச்சாளர்கள் ’நோ- போல்’ வீசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண டி20 தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய ‘நோ- போல்கள்’ அணிக்கு தோல்வியைத் தேடித் தந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிம்மன்ஸ் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அஸ்வின் வீசிய பந்தில் பும்ராவிடம் பிடி கொடுத்தார். ஆனால் அது ’நோ-போல்’ என அறிவிக்கப்பட்டது.

பிறகு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சில் அவர் பிடி கொடுத்து கொடுத்து ஆட்டமிழந்த போதும் அது ’நோ-போல்’ என தெரியவந்தது. இதுவே இந்திய அணிக்கு பெரிய ஆப்பாக அமைந்து விட்டது.

இது குறித்து முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் கூறுகையில், ”வேகப்பந்து வீச்சாளர்கள், ஜோர்க்கரோ அல்லது பவுன்சரோ வீச முயற்சிக்கும் போது, கால் வெளியே சென்று ’நோ-போல்’ ஆக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் ’நோ-போல்’ போடுவது என்பது எதிர்பார்க்காத ஒன்று. அவர்களுக்கு அப்படி எந்த நெருக்கடியும் கிடையாது. அவர்கள் சரியாக வலைபயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நாம் கோஹ்லியையும், கெயிலையும் ஒப்பிட்டு பேசி வந்தோம். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு வீரரை நம்பிய அணி கிடையாது. எப்படி ஒரு குழுவாக இணைந்து ஆட வேண்டும் என்பதை காட்டிவிட்டார்கள்.

அவர்கள் கிடைத்த வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டனர்.

அருமையான துடுப்பாட்ட ஆடுகளத்தில், விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், இந்தியா மேலும் 20 ஓட்டங்களை கூடுதலாக குவித்திருக்க வேண்டும்.

இந்தியாவால் இன்னும் பெரிய இலக்கை எட்ட முடியவில்லை என்பதை வைத்து பார்த்தால் அந்த அணி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றே தெரிகிறது“ என்று கூறியுள்ளார்.

Related posts: