அமெரிக்க – வட கொரிய தலைவர் சந்திப்பை வரவேற்றுள்ள சீனா !

Tuesday, July 2nd, 2019

நேற்று வட தென் கொரிய எல்லை பிராந்தியத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு வரவேற்கத்தக்கது என சீனா தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களும் சந்தித்தமை மற்றும் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தவிர, சீன வெளிவிவகாரத்துறை அமைச்சின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சின் பேச்சாளர் கெங் சுவாங்கும், சீனா சார்பாக மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு சர்வதேச சமாதானத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: